News August 19, 2024

ஏழை, நடுத்தர மக்களுக்கு ஷாக் தகவல்

image

ஏழை, நடுத்தர மக்கள் வீடு, மனைகளை தவணை முறையில் வழங்கும் நடைமுறையை கைவிட Housing Board முடிவு செய்துள்ளது. தவணை முறையில் வீட்டுக்கான தொகையை வசூலிப்பதில் பல பிரச்னைகள் நிலவுவதுடன், வாரியத்திற்கு ஏற்படும் கூடுதல் செலவால், வீட்டின் விலையை உயர்த்த வேண்டியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Similar News

News August 15, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 428 ▶குறள்: அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். ▶ பொருள்: அறிவில்லாதவர்கள் தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.

News August 15, 2025

இதை செய்யாமல், கூலி படத்தை CM பார்க்கிறார்: சீமான்

image

கூலிக்காக போராடும் மக்களை பற்றி கவலைப்படாமல், கூலி படத்தை CM ஸ்டாலின் பார்க்கிறார் என சீமான் விமர்சித்துள்ளார். சென்னையில் கைதான தூய்மை பணியாளர்களை நேரில் சென்று சந்தித்த சீமான் அதன்பின் பேட்டியளித்தார். அப்போது, மக்களை பற்றி சிந்திக்காதவர்களை தேர்வு செய்தது மக்களின் தவறு என்றார். நாட்டை தூய்மையாக வைத்திருப்பது அரசின் பொறுப்பா அல்லது தனியார் பொறுப்பா எனவும் கேள்வி எழுப்பினார்.

News August 15, 2025

இடஞ்சுழி எழுத்துகள் தெரியுமா?

image

ட, ய, ழ ஆகியவை இடஞ்சுழி எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை எழுதும்போது கையை இடதுபுறமாக வளைத்து (அ) சுழித்து எழுதுவதால் இடஞ்சுழி எழுத்துகளாகும். மாறாக இடதுபக்கம் இருந்து வலப்பக்கம் சுழித்து எழுதப்படுபவை வலஞ்சுழி எழுத்துகளாகும். உ-ம்: அ, எ, ஔ, ண, ஞ ஆகியவை. தமிழ் எழுத்துகளில் பெரும்பாலானவை வலஞ்சுழி எழுத்துகளாகவே உள்ளன. உ-ம்: அ, ஆ, இ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஓ, ஒள, க, ச, ஞ, ண, த, ந, ம, ல, வ, ழ,ள, ன.

error: Content is protected !!