News August 19, 2024
இன்று இந்த மாவட்டங்களில் கனமழை

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று RMC தெரிவித்துள்ளது. கோவை நீலகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல்லில் கனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
ராசி பலன்கள் (16.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 16, 2025
பிஹார் தேர்தல்: மாரடைப்பால் உயிரிழந்த வேட்பாளர்

பிஹார் தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரத்தில் ஜன்சுராஜ் வேட்பாளர் சந்திர சேகர் சிங் மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தராரி தொகுதியில் போட்டியிட்ட அவருக்கு, தேர்தல் பிரசாரத்தின் போது மாரடைப்பு வந்தது. சிகிச்சைக்காக ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்ட நிலையில், 2-வது முறையாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் 2,271 வாக்குகள் மட்டுமே பெற்று, 94,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
News November 16, 2025
அடிப்படை புரிதலின்றி பேசும் EPS: TRP ராஜா

தமிழகத்திற்கு வர இருந்த வெளிநாட்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றாக வெளியேறுவதாக <<18295289>>EPS குற்றம்சாட்டியிருந்தார்<<>>. இந்நிலையில், எவ்வித அடிப்படை புரிதலுமின்றி ஊர் வம்பு பேசும் பெருசுகள் போல EPS குற்றம்சாட்டி வருவதாக அமைச்சர் TRP ராஜா விமர்சித்துள்ளார். முதலீட்டு ஊக்குவிப்பு என்பது கையால் பாம்பு டான்ஸ் போடுவதுபோல சாதாரண விளையாட்டு அல்ல எனவும் கூறியுள்ளார்.


