News August 19, 2024
பழனியில் கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

பழனி கீரனுார் அருகே உள்ள புங்கமுத்துரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் வேலுச்சாமி (10) நேற்று பழனி அ.கலையம்புத்தூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். மாலை அக்ரஹாரம் பகுதி அருகே உள்ள கிணற்றருகில் வேலுச்சாமி சென்றபோது எதிர்பாராத விதமாக அதில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் வந்து சிறுவனின் உடலை மீட்டனர். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 27, 2025
வடமதுரையில் வசமாக சிக்கிய 3 பேர்!

வடமதுரை அருகே பிலாத்து பகுதியில், வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது உப்புக்குளம் அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட மாயவன் (36, வாலிசெட்டிபட்டி), பெரிய பொன்னன் (28, மலைப்பட்டி), மணிமாறன் (26,வடமதுரை) ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 சேவல்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
News December 27, 2025
திண்டுக்கல்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News December 27, 2025
வத்தலக்குண்டு: காதல் வலையில் நகை திருட்டு?

வத்தலக்குண்டை சேர்ந்த மாணவர் பட்டிவீரன்பட்டி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது, மாணவி ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி ஒரு கட்டத்தில் மாணவியை மிரட்டி, வீட்டிலிருந்த 15சவரன் நகைகயை மாணவர் வாங்கினார். வீட்டிலிருந்த நகைகள் மாயமானதை அறிந்தபெற்றோர், மகளிடம் விசாரித்தபோது உண்மை தெரிந்தது.புகாரின்படி, மாணவர், அவருக்குஉடந்தையாக இருந்த மற்றொருவரையும் போலீசார் கைது செய்தனர்.


