News August 18, 2024
திருப்பத்தூர் வரவுள்ள அதிமுக பொதுச் செயலாளர்

திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் கடந்த வியாழக்கிழமை உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். இந்த நிலையில், அவருடைய படத்திறப்பு நிகழ்விற்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி வருகின்ற 21.08.2024 புதன்கிழமை காலை 9.00 மணியளவில் காக்கங்கரையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு வருகை தர உள்ளதாக திருப்பத்தூர் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
Similar News
News August 13, 2025
BIG NEWS: திருப்பத்தூரில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு

கந்திலி அடுத்த பரதேசிபட்டி ஊராட்சியில் சட்ட விரோதமாக கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறுவதாக தொடர் புகார் எழுந்தது. இதை அறிந்த மருத்துவ மற்றும் ஊரக பணி இணை இயக்குநர் ஞான மீனாட்சி அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது இதையே தொழிலாக கொண்ட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். தருமபுரி, சேலத்தை தொடர்ந்து தற்போது திருப்பத்தூரிலும் இந்த கும்பலின் அட்டுழியம் தலை தூக்கி உள்ளது.
News August 13, 2025
திருப்பத்தூர் மக்களே…கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

திருப்பத்தூர் மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 13, 2025
பொது இடத்தில் பிறந்த நாள் விழா – வாலிபர் கைது

ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி இவரது மகன் நவீன் குமார் என்பவர் கடந்த 10 ம் தேதி அதே பகுதியில் பொது இடத்தில் பொது மக்களுக்கு இடையூறாக பிறந்த நாள் விழா முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினார். இது குறித்து தீர்த்தகிரி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து நவீன்குமார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.