News August 18, 2024
விநாயகர் சதுர்த்தி: புதிய கட்டுப்பாடு விதிப்பு

தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், 10 அடிக்கு மேல் விநாயகர் சிலை வைக்கக் கூடாது என டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். வேற்று மத வழிபாட்டு தலம், மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலை வைக்க அனுமதி கிடையாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாக்கும் வேதிப்பொருள்களால் ஆன சிலைகளுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 14, 2025
ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க முடிவு?

டிரம்ப் – புடின் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் அதிக தள்ளுபடியில் விற்கப்படுகிறது. இதனால், டிரம்ப் மிரட்டலுக்கு மத்தியிலும், ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, தள்ளுபடி குறைந்ததால் எண்ணெய் வாங்குவதை பொதுத்துறை நிறுவனங்கள், கடந்த மாதம் நிறுத்தி இருந்தன.
News August 14, 2025
அரசுப் பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிவு: கவர்னர்

TN-ல் அரசுப் பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருவதாக RN ரவி கூறியுள்ளார். 79-வது சுதந்திர தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள உரையில் வேலைவாய்ப்பின்றி வெறும் படிப்புச் சான்றிதழ்களை பெற்றவர்களாக மாணவர்கள் திகழ்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். சுதந்திரம் கிடைத்து 78 ஆண்டுகள் ஆன பிறகும் பொதுப்பாதையை பயன்படுத்தும் பட்டியலின மக்கள் உடல் ரீதியாக தாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து?
News August 14, 2025
BP நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகள்

இதய ஆரோக்கியம் காக்கவும், உயர் ரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் இந்த உணவுகள் உதவும்: *ஆரஞ்சு, எலுமிச்சை, கிரேப் ஃப்ரூட் உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள் *ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த மீன்கள் *பூசணி விதை *நெல்லி உள்ளிட்ட பெர்ரி வகை பழங்கள் *பிஸ்தா, பூண்டு, கேரட், செலரி, தக்காளி, பிரக்கோலி, சியா விதைகள், பீட்ரூட், ஸ்பினாச் (பசலைக் கீரை) *வாழைப்பழம் *பால், தயிர் உள்ளிட்ட கால்சியம் நிறைந்த உணவுகள் *முழு தானியங்கள்.