News August 18, 2024

நாளை விருந்து படைக்கிறது ‘வாழை’

image

‘வாழை’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் 23ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ ஆகிய படங்களின் வெற்றியை மாரி செல்வராஜ் தக்கவைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Similar News

News January 15, 2026

PM மோடியின் மதுரை பொதுக்கூட்டத்தை தடுத்த EPS

image

மதுரையில் வரும் 23-ம் தேதி PM மோடி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் திடீரென மதுராந்தகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கு EPS தான் காரணம் என கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திருப்பரங்குன்றத்தில் PM மோடி தரிசனம் செய்வதாக இருந்தது. இதனால், சிறுபான்மையினரிடம் ADMK-க்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவும் போய்விடும் என EPS தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.

News January 15, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜனவரி 15, தை 1 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:00 AM & 1:00 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: துவாதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.

News January 15, 2026

ELECTION: தவெகவுடன் கூட்டணி அமைக்கிறதா SDPI?

image

மக்களுக்காக உழைப்பதற்கு யார் வந்தாலும் அவர்களை வரவேற்க தயாராக இருப்பதாக SDPI தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். மாஸ் லீடராக வரும் விஜய், மக்களுக்கு பணி செய்ய வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். இம்மாத இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் எங்கள் கட்சி மாநில குழு கூட்டம் நடைபெறும். அதில் தவெகவா அல்லது யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!