News August 18, 2024

விழுப்புரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தேதி அறிவிப்பு

image

விழுப்புரம் கோட்டத்தில் கோட்ட அளவிலான ஆகஸ்ட் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் எதிர்வரும் 20.08.2024 அன்று விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டங்களுக்குட்பட்ட அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 2, 2025

விழுப்புரம்: ஆற்றில் மூழ்கி மாணவன் பலி!

image

விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் நேற்று (நவ.1) மாலை நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கிய உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த அங்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

News November 2, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (நவ.1) இரவு 10.00 மணி முதல் இன்று (நவ.2) காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 1, 2025

விழுப்புரம்: தறிகெட்டு ஓடிய பைக்; இருவர் கைது!

image

விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையம் காவலர்கள் நேற்று அக்.31 வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பாச்சனூர் பகுதியை சேர்ந்த ராமு கானையைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோர் தங்கள் பைக்கில் மக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக சென்றது தெரியவந்தது. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவரது வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!