News August 18, 2024
இனி இதுவும் தீவிரவாதமாகக் கருதப்படும்?

பெண்களுக்கு எதிரான பாலாதிக்க வன்முறைகளை தீவிரவாதத்தின் ஒரு வடிவமாகக் கருத இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. பொது இடங்கள், பணியிடங்கள் & ஆன்லைனில் சிறுமிகள் & பெண்களுக்கு எதிராக ஆபாச & வெறுப்பூட்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்களை கண்டறிந்து, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கூப்பர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Similar News
News October 15, 2025
வெளிநாடு செல்ல கட்டுப்பாடு இல்லை: கார்த்தி சிதம்பரம் Happy

INX மீடியா வழக்கில் காங்., MP கார்த்திக் சிதம்பரம் வெளிநாடுகளுக்கு செல்ல விதித்திருந்த கட்டுப்பாட்டை டெல்லி உயர்நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. INX மீடியா வழக்கில் ஜாமின் பெற்றிருந்தாலும், ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்ல அனுமதி பெற வேண்டும் என்ற விதி இருந்தது. இந்த விதியை தளர்த்த கோரி கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நீதிபதி ரவீந்தர் துடேஜா கட்டுப்பாட்டை தளர்த்தி உத்தரவிட்டார்.
News October 15, 2025
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதிப்பு

இந்தியா, ஆஸி., இடையேயான மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டி, கடந்த அக்.12-ல் நடைபெற்றது. இதில், 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸி., வெற்றி பெற்றது. இப்போட்டியில் slow over-rate காரணமாக (பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக) இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கி., நியூசி., வங்கதேசம் அணிகளுடன் மோதவுள்ள இந்தியா, 2-ல் நிச்சயம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
News October 15, 2025
தைராய்டுக்கு தீர்வு கொடுக்கும் மந்தாரை கஷாயம்

தைராய்டு பிரச்னை தீர்க்கும் மந்தாரை கஷாயம் செய்ய, கொத்தமல்லி விதைகளை முதல் நாள் இரவே 300 மில்லி அளவு தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். அடுத்தநாள் காலையில் அதை கொதிக்க விட்டு, மந்தாரை இலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அது150 மில்லியாக சுண்டும் வரை கொதிக்க விடுங்கள். சுண்டிய பிறகு வடிகட்டி எடுத்தால் மந்தாரை கஷாயம் ரெடி. இந்த மந்தாரை கஷாயத்தை தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.