News August 18, 2024
சிபில் ஸ்கோர் குறைஞ்சிடுச்சா? இதை செய்யுங்கள்

கடன் வழங்குவது குறித்து சிபில் ஸ்கோரை வைத்தே வங்கிகள் முடிவு செய்கின்றன. அந்த ஸ்கோரை சீராக வைக்க பொருளாதார நிபுணர்கள் தெரிவித்த ஆலோசனையை பார்க்கலாம். வீடு, வாகனம் உள்பட எந்தக் கடனாக இருந்தாலும் உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும். தேவையில்லாமல் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பது, அது ரிஜெக்ட் ஆவது போன்றவைகளால் ஸ்கோர் பாதிக்கப்படும். இதை தவிர்த்தால் சிபில் ஸ்கோர் அதிகரிக்கும்.
Similar News
News January 11, 2026
PSLV C-62 ராக்கெட் கவுண்ட்டவுன் தொடங்கியது!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 10.17 மணிக்கு, PSLV C-62 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நிலையில், 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது. DRDO சேவைக்காக வடிவமைக்கப்பட்ட EOS N1 செயற்கைக்கோளுடன், பல்வேறு நாடுகளை சேர்ந்த 17 வணிக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன. இந்நிலையில் ராக்கெட், செயற்கைக்கோள்களின் ஒருங்கிணைப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதாக ISRO தெரிவித்துள்ளது.
News January 11, 2026
எதுக்கு சமத்துவ பொங்கல்? வானதி

பொங்கலே கொண்டாடாத சிறுபான்மையின மக்களை வைத்து CM ஸ்டாலின் சமத்துவ பொங்கல் கொண்டாடுவதாக வானதி விமர்சித்துள்ளார். சிறுபான்மை மக்கள் அவர்களின் பண்டிகைகளை கொண்டாடுவதை மதிப்பதாக கூறிய அவர், எங்காவது சிறுபான்மை மக்கள் தமிழ் கலாச்சாரத்தோடு இணைந்து சூரியனை வணங்குவதை பார்த்திருக்கிறீர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதன்மூலம் அவர் இந்து மக்களை ஏமாற்றுகிறார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News January 11, 2026
பிக்பாஸ் சீசன் 9 வின்னர் இவர்தானா?

பிக்பாஸ் 9-ன் வின்னர் பெண் போட்டியாளராக தான் இருப்பார் என ஆரம்பம் முதலே சிலர் கூறிவந்தனர். ஆனால் கானா வினோத்துக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருந்ததால் அவரே டைட்டில் அடிப்பார் என நம்பப்பட்டது. இந்நிலையில், அவர் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினார். இதனையடுத்து டைட்டில் ரேஸில் இருந்த சாண்ட்ராவும் எவிக்ட் ஆனதால், திவ்யா கணேஷ்தான் இந்த சீசனின் வெற்றியாளர் என்கின்றனர். உங்கள் கருத்து?


