News August 18, 2024
தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சீல்

மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு (WIN TV) சீல் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி நிறுவனம் நடத்தி ரூ500 கோடி மோசடி செய்த வழக்கில், பாஜக பிரமுகர் தேவநாதன் அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவருடைய வீடு, அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று சோதனை செய்யப்பட்ட நிலையில், ரூ.4 லட்சம், 2 கார்கள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News September 18, 2025
சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

கிண்டி ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் நாளை (செ.19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் 2 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 8th,12th, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு <
News September 18, 2025
சென்னை: ட்ரெண்டாகும் AI புகைப்படம் எச்சரிக்கை!

சென்னை மக்களே Google Gemini பெயரில் வைரலாகும் Nano Banana Al ட்ரெண்ட் தொடர்பாக, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை போலியான இணையதளங்கள் அல்லது செயலிகளில் பதிவேற்ற வேண்டாம். ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிகணக்கு போன்ற தனிநபர் விபரங்கள் திருடப்படலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்க
News September 18, 2025
சென்னை ஆணையரகத்தில் நடிகர் பாலா மீது புகார்

நடிகர் பாலா மீதும், காந்தி கண்ணாடி படக்குழு மீதும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, காந்தி கண்ணாடி திரைப்படத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் காட்சிகள் மற்றும் வசனங்கள் இருப்பதாகக் கூறி, சிவசேனா கட்சியினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனர் ஷெரீப், நடிகர் கேபிஒய் பாலா மற்றும் பாலாஜி சக்திவேல் மீது புகார் தெரிவித்துள்ளனர்.