News August 18, 2024
திண்டுக்கல்லில் அரசு மருத்துவர்கள் பேரணி

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து, மருத்துவ சேவைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் தவிர, மற்ற மருத்துவ சிகிச்சைகள் நேற்று காலை 6 மணி முதல் இன்று ஞாயிறு காலை 6 மணி வரை மேற்கொள்ளப்படாது எனத் தெரிவிக்கப்பட்டு, திண்டுக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனைகளில், அரசு மருத்துவர்கள் ஒரு மணி நேரம் தர்ணா போராட்டம் நடத்தி பேரணி சென்றனர்.
Similar News
News August 21, 2025
திண்டுக்கல்: தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாம்பில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், இளம் பெண்கள் சுய விவரக் குறிப்புடன் முகாமில் பங்கேற்று பயனடையலாம். இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். விவரங்களுக்கு 94990 55924 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என உதவி இயக்குநா் ச.பிரபாவதி தெரிவித்துள்ளார்.
News August 21, 2025
திண்டுக்கல்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டாரத்திற்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை (ஆகஸ்ட் 22) செட்டியபட்டி நாடக மேடை திடலில், காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற உள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டை திருத்தம், விண்ணப்பம் உள்ளிட்ட அரசு திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். இதில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் தங்கள் கோரிக்கைக்கு உரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறலாம்.
News August 21, 2025
திண்டுக்கல்: வாட்ஸ்அப்பில் சிலிண்டர் புக்கிங் செய்யலாம்!

மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!