News August 18, 2024
18,720 பெண்கள் பயன்பெறுவார்கள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

சிப்காட் மெகா குடியிருப்பு மூலம் 18,720 பெண்கள் பயன்பெறவுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த குடியிருப்பை முழுவதுமாக பாக்ஸ்கான் நிறுவனம் எடுத்து கொள்கிறது. பணிபுரியும் பெண்களுக்கென்று தனி கிராமமே அங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இந்த கட்டிடத்திற்கான முழு நிதியை தமிழக அரசு தான் கொடுத்துள்ளது” என்றார்.
Similar News
News October 15, 2025
காஞ்சி: பணம் திருடு போய்டுச்சா? இத பண்ணுங்க

காஞ்சி மக்களே மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930, வேலூர் எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க விழிப்போடு இருங்கங்க.
News October 15, 2025
காஞ்சி: சொந்த ஊரில் அரசு வேலை!

காஞ்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 126 கிராம உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளமாக மாதம் ரூ.35,100 வரை வழங்கப்படும். 21 வயது பூரத்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். SC/ST-42 வயது, OBC-39 வயது, OC-32 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அக்.25க்குள் இந்த <
News October 15, 2025
காஞ்சிபுரம்: இளைஞர்களுக்கு உதவித்தொகை குறித்து அறிவிப்பு!

காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு மைய அலுவலகத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். மேலும், வேலைவாய்ப்பு அலுவலகம் சென்று விண்ணப்பத்தினை நேரில் பெற்றுக்கொள்ளலாம், அல்லது www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.