News August 18, 2024

மின்சார வேலி அமைத்தது தொடர்பாக மூன்று பேர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நேற்று முன்தினம் மாதவன்(56) என்பவர் கால்நடைகளை மேய்க்க சென்ற போது மின்சார கம்பி வேலியில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பிரம்மதேசம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிறுவாடி கிராமத்தை சேர்ந்த கோதண்டராமன்(38), ராஜ்குமார் என்கிற ராஜகுமரன்(25), அய்யனார்(38) ஆகிய 3 நபர்கள் கைது செய்தனர்.

Similar News

News August 28, 2025

விழுப்புரம்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

image

விழுப்புரம் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அல்லது <>உங்களுடன் ஸ்டாலின்<<>> முகாமில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க

News August 28, 2025

விழுப்புரத்தில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கற்சிற்பம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியை அடுத்த தாமரைக்குளம் பகுதியில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்சிற்பத்தில் யானை மீது அமர்ந்து பவனி வருவது போன்ற முருகனின் அழகிய கற்சிற்பம் ஒன்று விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வு மேற்கொண்டபோது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிய சிற்பம் விழுப்புரம் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்

News August 27, 2025

இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடம் பகுதியில் இன்று(ஆக.27) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!