News August 18, 2024
ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் அறிக்கை

சட்டம் ஒழுங்கின் நிலை குறித்து ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை அறிக்கை அளிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், போராடி வரும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
இன்னைக்கு ரொம்ப கவனமா இருங்க

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று(அக்.15) கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னையிலும் மிதமான மழை பெய்யுமாம். எனவே, பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வோர் குடைய எடுக்க மறக்காதீங்க.
News October 15, 2025
தீபாவளி.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

இன்னும் 5 நாள்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், அதிக ஒலி எழுப்பும் & தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடிகளை வெடிப்பதை தவிர்க்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. ஹாஸ்பிடல்ஸ், வழிபாட்டு தலங்கள் & அமைதியாக இருக்கும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் <<18005190>>நேரத்தையும்<<>> அரசு அறிவித்துள்ளது.
News October 15, 2025
அறிக்கை வெளியிட்டார் நடிகர் அஜித்

அஜித்குமார் ரேஸிங், மறக்க முடியாத முதல் சீசன் என்று நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த பயணத்தில் வெற்றி, தோல்வியை சரிசமமாக சந்தித்தோம் என்றும், போட்டிகளை கடந்து மனித உறவுகளை கட்டியெழுப்பியதாகவும் கூறியுள்ளார். மேலும், பல சர்வதேச அணிகளும், அமைப்புகளும் அஜித்குமார் ரேஸிங் அணியுடன் இணைந்தன. இதுவரை கற்றதையெல்லாம் அடுத்த பயணத்தில் சிறப்பாக பயன்படுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.