News August 18, 2024
வாசிப்பு பழக்கத்தால் கிடைக்கும் நன்மைகள்

நாவல், கதை வாசிக்கும் போது அதில் இடம்பெறும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் புதிய உலகத்திற்கு நம்மை அழைத்து செல்கின்றன. இதனால் கற்பனை திறன் அதிகரிப்பதோடு படைப்பாற்றல் மேம்படுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலைத் தீர்ப்பதற்கு மனது பக்குவப்படுகிறது. பல்வேறு துறை அறிவை புத்தக வாசிப்பு அளிக்கிறது. கவனச் சிதறலை தடுத்து கவனத்தை குவிக்கும் திறன் மேம்படுகிறது. மன அழுத்தத்தை போக்கவும் வழிவகுக்கிறது.
Similar News
News October 19, 2025
CPR, ராமதாஸ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன் வீடு மற்றும் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இரு இடங்களிலும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாள்களாக CM, EPS, விஜயகாந்த், ரஜினிகாந்த், விஜய், சசிகலா உள்ளிட்ட முக்கிய நபர்களின் வீடுகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
News October 19, 2025
மகளிர் உரிமைத்தொகை ₹1000 .. வெளியானது ஹேப்பி நியூஸ்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு டிச.15 முதல் ₹1000 வழங்கப்படும் என உதயநிதி அண்மையில் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து கிராம வாரியாக பயனாளிகளின் எண்ணிக்கை & விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் இறுதி செய்ய தொடங்கியுள்ளனர். இதுவரை 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில், தகுதியான பெண்களின் லிஸ்ட் ரெடியாகி வருவதாக கூறப்படுகிறது.
News October 19, 2025
விவாகரத்து வழக்கில் ஐகோர்ட் நூதன தீர்ப்பு

நன்றாக சம்பாதிக்கும் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. வழக்கறிஞர் ஒருவருக்கும், ரயில்வே அதிகாரியான பெண்ணுக்கும் கடந்த 2010-ல் திருமணம் நடந்துள்ளது. விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள மனைவி 50 லட்சம் கேட்டதாக தெரிகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, உண்மையிலேயே நிதி உதவி தேவைப்படுவார்கள் மட்டுமே பராமரிப்பு உதவி கோர முடியும் என தீர்ப்பளித்துள்ளார்.