News August 18, 2024
மின்சார ரயில்கள் பகுதிநேரமாக ரத்து

அரக்கோணம் அருகே பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், இன்று மின்சார ரயில்கள் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. சென்டிரலில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரயில், திருவள்ளூர்- திருத்தணி இடையே நிற்காது என்றும், அதேபோல் திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரயில், திருத்தணி- திருவள்ளூர் இடையே நிற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 9, 2025
திருவள்ளுர்: இணைய வழி மோசடி- கொத்தாக கைது

திருவள்ளூர் வேப்பம்பட்டு சேர்ந்த பிஜியின் ஹரால்ட் ராமசாமி, வாட்ஸ்அப் வந்த வர்த்தக விளம்பரத்தை நம்பி, ஆன்லைன் வர்த்தக தளத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என முதலீடு செய்துள்ளார். ரூ.10,25,200/- அனுப்பி பணத்தை திரும்ப எடுக்க முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். இணையவழி குற்றப்பிரிவு போலீசார் சிவகங்கை சேர்ந்த 5பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News September 9, 2025
BREAKING: திருவள்ளூர் வரும் விஜய்

2026 ஆண்டு சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு கட்சியினர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வரும்.13ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை பிரச்சாரம் செய்கிறார். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரும் செப்.27-ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். (SHARE)
News September 9, 2025
திருவள்ளூர்: வைரஸ் காய்ச்சலா? இத பண்ணுங்க

திருவள்ளூர் மக்களே, வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். (ஷேர் பண்ணுங்க)