News August 18, 2024
மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் எப்போது? EC விளக்கம்

ஜம்மு-காஷ்மீர், ஹரியானா தேர்தல் முடிவுகள் அக்.4இல் வந்தபிறகே மகாராஷ்டிர தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுமென EC தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர சட்டசபை பதவிக்காலம் நவ. 26 முடிவடைவதால், அதற்கு தேர்தல் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் ஹரியானா, JK சட்டசபைகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து EC விளக்கம் அளிக்கையில், அக்.4க்கு பிறகே அறிவிக்கப்படும் எனக் கூறியது.
Similar News
News October 20, 2025
இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!

தீப ஒளித் திருநாளில் நண்பர்கள், குடும்ப உறவுகளுக்கு வாழ்த்துகளை தவறாமல் பகிருங்கள். *மத்தாப்பு போல மனம் மகிழட்டும், பட்டாசு போல துன்பம் சிதறட்டும்.. இனிவரும் நாளெல்லாம் வாழ்வில் இன்ப ஒளி பரவட்டும். *அனைவர் வாழ்விலும் இருள் நீங்கி ஒளி பிறக்கவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விடவும் தீபாவளி வாழ்த்துகள். *அறியாமை இருள் நீங்கி அறிவுச் சுடரொளி பரவட்டும்! இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.
News October 20, 2025
பிஹாரில் 24-ம் தேதி பரப்புரையை தொடங்கும் மோடி

பிஹார் மாநிலத்தில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகள் இரண்டும் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. இந்நிலையில், பிஹார் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்தை PM மோடி வரும் 24-ம் தேதி தொடங்குகிறார். இந்த மாத இறுதிக்குள் 4 பிரச்சாரப் பேரணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
News October 20, 2025
வரலாற்றில் இன்று

*1963 – இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பிறந்தநாள்.
*1974 – பாடலாசிரியர் பா.விஜய் பிறந்தநாள்.
*1978 – இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பிறந்தநாள் .
*1991 – உத்தரகாசியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 1,000 பேர் வரை உயிரிழந்தனர்.
*2008 – தமிழ திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் நினைவுநாள்.