News August 18, 2024
ஆகஸ்ட் 18: வரலாற்றில் இன்று

▶1227 – மங்கோலியப் பேரரசர் செங்கிஸ் கான் இறந்த நாள். ▶1868 – பிரெஞ்சு வானியலாளர் பியேர் ஜான்சென் சூரிய கிரகணத்தை ஆராயும்போது ஹீலியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். ▶1920 – பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டமூலம் அமெரிக்காவில் கொண்டு வரப்பட்டது. ▶1928 – சென்னை மியூசிக் அகாடமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது. ▶1945 – விடுதலைப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்த நாள்.
Similar News
News September 14, 2025
கும்கி 2-ல் அர்ஜுன் தாஸ் வில்லன்?

13 ஆண்டுகளுக்கு பிறகு ‘கும்கி’ என்ற சூப்பர் ஹிட் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது. பிரபு சாலமன் இயக்கும் இப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில், அவர் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், மதி, ஸ்ரீதா ராவ் ஆகிய புதுமுகங்களே கதையின் நாயகர்களாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
News September 14, 2025
சிலருக்கு பிரதமரை பாராட்ட மனமில்லை: நிர்மலா

GST குறித்து ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னையில் நடந்த GST விழிப்புணர்வு நிகழ்வில் பேசிய அவர், GST வரி குறைப்பில் மாநிலங்களுக்கே அதிக பங்கு உண்டு என்றாலும், சிலருக்கு பிரதமரை பாராட்ட மனமில்லை என்று CM ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தார். GST சீர்திருத்தத்தால் 140 கோடி மக்களின் வரிச்சுமை குறைந்துள்ளதாகவும் பேசியுள்ளார்.
News September 14, 2025
மடியில் குழந்தையுடன் DSP இன்டர்வியூ வந்த பெண்!

தாய் பாசத்தை வெல்ல இந்த உலகில் வேறெதுவும் இல்லை என்பதற்கு இந்த சம்பவமும் சான்று. ம.பி.யின் Public Service Commission நேர்காணலில், வர்ஷா படேல் தனது 20 நாட்களே ஆன குழந்தையை மடியில் தாங்கியபடி பங்கேற்றுள்ளார். கர்ப்பமாக இருந்தபோது தேர்வெழுதி 11-வது ரேங்க் பிடித்த வர்ஷா, குழந்தையுடனே நேர்காணலை சந்தித்தார். தாயாகிய உறுதியும், பெண்மையின் சக்தியும் ஒருசேர அவர் DSP-யாக தேர்வாகி இருக்கிறார்.