News August 17, 2024
BSNLஇல் ₹997க்கு 160 நாள் வேலிடிட்டி

AIRTEL, JIO ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்ந்ததில் இருந்து மக்கள், BSNL SIM வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், ₹997க்கு அசத்தலான ரீசார்ஜ் பிளானை BSNL வழங்கியுள்ளது. 160 நாள்கள் வேலிடிட்டியுடன் இந்த பிளானில், ஒரு நாளைக்கு 2 GB டேட்டா, 100 SMS, வரம்பற்ற அழைப்பு வசதி அளிக்கப்படுகிறது. பிற நெட்வொர்க்குகள் இந்த பிளானை 84 நாள்கள் வழங்குகின்றன. நீங்கள் எந்த SIM கார்டு பயன்படுத்துகிறீர்கள்?
Similar News
News December 30, 2025
அஜித் படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கலையா?

‘குட் பேட் அக்லி’ பட வெற்றிக்கு பிறகு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கவுள்ளார். ஆனால், இந்த படத்திற்கு ₹300+ கோடி பட்ஜெட் தேவைப்படுவதாக கூறப்படும் நிலையில், இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லையாம். ‘குட் பேட் அக்லி’ ₹250+ கோடிக்கும் மேல் வசூலித்திருந்தாலும், இது பெரிய பட்ஜெட் என்பதால், தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்களாம். பொறுத்திருந்து பார்ப்போம்!
News December 30, 2025
தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு ஒப்புதல்

ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சுழற்சி முறையில், மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். 2025-ல், தமிழகத்தின் ஊர்தி தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், 2026-ம் ஆண்டில் நடைபெற உள்ள 77-வது குடியரசு தின நிகழ்ச்சிக்கு, தமிழக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. பசுமை மின்சக்தி என்ற தலைப்பிலான தமிழக அரசின் ஊர்திக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.