News August 17, 2024
கடலூர் கலெக்டர் கடும் எச்சரிக்கை

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம் என்ற தவறான பதிவுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே சமூக வலைதளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News August 9, 2025
கடலூர் மாவட்ட செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம், திமுக கடலூர் மாவட்ட செயலாளர் மற்றும் திமுக மண்டல பொறுப்பாளர் மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் காணொளி வாயிலாக இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
News August 9, 2025
கடலூரில் குழந்தை பாக்கியம் தரும் கோவில்!

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் கிராமத்திலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுப்பிரமணியர் இடப்பக்கம் மயில் மீது அமர்ந்து சம்ஹாரமூர்த்தி காட்சி தருகிறார். இக்கோயில் மிக அபூர்வமான திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு குழந்தை இல்லாதோர் வாரம்தோறும் தேன் அபிஷேகம் செய்து மனமுருகி வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்!
News August 9, 2025
விருதை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொத்தனார் மீது வழக்கு

விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம் மகன் விக்னேஷ் (வயது 32). கொத்தனார். இவரது வீடு அமைந்துள்ள பகுதிக்கு சென்ற கடலூர் சிறுமிக்கு விக்னேஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது பற்றி அந்த சிறுமி தனது தாயிடம் கூறினார். இதையடுத்து சிறுமியின் தாய் இது தொடர்பாக கடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விக்னேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.