News August 17, 2024
இரவில் கோதுமை சப்பாத்தி சாப்பிடுபவரா?

இரவில் கோதுமை சப்பாத்தியை சாப்பிடலாமா, கூடாதா என சந்தேகம் இருக்கும். அதற்கு உடல்நல ஆலோசகர்கள் தெரிவிக்கும் விளக்கத்தை காணலாம். கோதுமை சப்பாத்தியில் கலோரிகள், கார்போ ஹைட்ரேட்டுகள் அதிகம் இருக்கும் என்றும், அதை இரவில் சாப்பிட்டால் செரிமானம் ஆக அதிக நேரமாகும் என்றும் கூறுகின்றனர். இதனால் ஜீரண பிரச்னை ஏற்படும் என்பதால், இரவு உணவாக சப்பாத்தி சாப்பிடுவதை தவிர்க்கும்படி அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
Similar News
News November 4, 2025
Waiting List-ல் உள்ள டிக்கெட்டை Confirm பண்ணணுமா?

Waiting List-ல் உள்ள டிக்கெட்டை Confirm செய்ய, IRCTC-ல் Vikalp என்ற அம்சம் உள்ளது. IRCTC-ல் டிக்கெட் புக் செய்த பிறகு, அது Waiting List-க்கு சென்றால், இந்த ஆப்ஷனை IRCTC காட்டும். ஆனால், Vikalp-ல் ஒரு சிக்கல் உள்ளது. நீங்கள் தேர்வு செய்யும் அதே ரயிலில், அதே ஸ்டேஷனில் டிக்கெட் Confirm ஆகும் வாய்ப்பு குறைவு. அதே வழித்தடத்தில் செல்லும் ஏதாவது ஒரு ரயிலில் அருகாமை ஸ்டேஷனில் டிக்கெட் கிடைக்கலாம்.
News November 4, 2025
BREAKING: கனமழை வெளுக்கும்.. வந்தது அலர்ட்

கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று(நவ.4) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதேபோல், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருச்சி மாவட்டங்களில் நாளை பரவலாக கனமழை பெய்யும் எனவும் IMD கணித்துள்ளது. மேலும், நாளை மறுதினமும் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
News November 4, 2025
பெண்களுக்கு தாலி கட்டாயம் இல்லை: சின்மயி கணவர்!

தாலி அணிவது பெண்களின் விருப்பம், அது கட்டாயம் இல்லை என சின்மயியின் கணவரும், இயக்குநருமான ராகுல் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். சின்மயியிடமும் திருமணத்திற்கு பிறகு தாலி அணிவது உன்னுடைய விருப்பம் என கூறியதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார். வரும் 7-ம் தேதி ராகுலின் இயக்கத்தில், ரஷ்மிகா நடித்துள்ள ‘The Girlfriend’ வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரின் கருத்து பற்றி நீங்க என்ன சொல்றீங்க?


