News August 17, 2024
முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்: சித்தராமையா

காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக, கர்நாடக CM குற்றஞ்சாட்டியுள்ளார். அரசு திட்டத்தில் சித்தராமையா மனைவிக்கு முறைகேடாக மனை ஒதுக்கியதாக எழுந்த புகாரில், அவர் மீது வழக்கு தொடர ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் அவர் பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து பேசிய அவர், தான் முறைகேடு செய்யவில்லை என்பதால் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.
Similar News
News December 28, 2025
BREAKING: நல்லகண்ணு மீண்டும் ICU-வில் அனுமதி

CPI மூத்த தலைவர் நல்லகண்ணு ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாள்களுக்கு முன்புதான் 101 வயதை அவர் எட்டினார். ஏற்கனவே நுரையீரல் தொற்று ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருக்கும் அவருக்கு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News December 28, 2025
பெரிய PDF-களை படிக்க கஷ்டமா இருக்கா? இதோ Solution

மாணவர்களே, பெரிய பெரிய PDF-களை படிக்க நேரமே இல்லையா? உங்களுக்காகவே ‘ChatPDF’ என்ற AI Tool இருக்கிறது. இந்த AI Tool-ல் உங்கள் PDF-ஐ அப்லோட் செய்தால் போதும். உங்களுக்கு பதில் அதுவே முழு PDF-ஐ படித்து முடித்துவிடும். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தை பற்றி அதனிடம் கேள்வியாக கேளுங்கள். அது, PDF-ல் இருக்கும் பதில்களையும், அதற்கான விளக்கத்தையும் அளிக்கும். மாணவர்கள் படிப்புக்கு உதவும், SHARE.
News December 28, 2025
அதிமுகவில் இருந்து நீக்கம்.. இபிஎஸ் கொடுத்த அதிர்ச்சி

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், EX MLA-வுமான பல்பாக்கி சி.கிருஷ்ணனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் EPS நீக்கியுள்ளார். சி.கிருஷ்ணன், சேலம் புறநகர் மாவட்ட MGR மன்றச் செயலாளராக தற்போது பொறுப்பு வகித்து வந்த நிலையில் நீக்கப்பட்டுள்ளார். 2026 பேரவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தனது கோட்டையில் இருந்தே முக்கிய நிர்வாகியை நீக்கி EPS அதிர்ச்சி கொடுத்துள்ளார்.


