News August 17, 2024
முட்டை விலை 5 காசுகள் உயர்ந்தது

முட்டை விலை 5 காசுகள் உயர்ந்துள்ளதாக, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. முட்டை விலை சமீப நாள்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், 5 காசுகள் உயர்ந்து மொத்த விலையில் ஒரு முட்டை ₹4.55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில்லறை விலையில் ஒரு முட்டை ₹6 வரை விற்பனையாகிறது.
Similar News
News September 16, 2025
TN முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் நயினார்!

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 தேர்தலில் 30-35 தொகுதிகளில் வெல்ல வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக முதற்கட்டமாக 8 இடங்களில் மண்டல அளவில் பூத் கமிட்டி மாநாடுகள் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் 21-ம் தேதி திண்டுக்கல்லில் முதல் மாநாடு நடத்தப்பட உள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News September 16, 2025
ஆசிய கோப்பை: இன்று AFG Vs BAN

ஆசிய கோப்பையில் இன்று குரூப் B-ல் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் – வங்கதேச அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாகும். போட்டியில் வங்கதேச அணி தோற்றால் குரூப் B-ல் இருந்து சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை, ஆப்கானிஸ்தான் முன்னேறும். Head to Head = 12 போட்டிகள், வெற்றி = 7 AFG, 5 BAN.
News September 16, 2025
வயிற்று கொழுப்பு கரைய இந்த யோகாவை பண்ணுங்க!

*தரையில் கால்களை நீட்டி நேராக அமரவும் *வலது காலை மடித்து, கணுக்காலை தரையில் ஊன்றவும் *இடது காலை மடித்து(படத்தில் உள்ளது போல) வைக்கவும் *இடது கையை பின்னோக்கி தரையில் வைத்தும், வலது கையை வலது கால் முட்டியின் மீது வைத்தும் பிடித்து கொள்ளவும் *தலையை பின்னோக்கி பார்த்தபடி திருப்பி, இந்த நிலையில், 15-20 விநாடிகள் வரை இருக்கவும் *இந்த மத்ஸ்யேந்திராசனம் வயிற்று கொழுப்பை குறைக்கும். SHARE.