News August 17, 2024
அதிக மகளிர் பணிபுரியும் மாநிலம் தமிழ்நாடு: ஸ்டாலின்

தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பெண்கள் அதிகளவில் பணிபுரிவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் ஆலை ஊழியர்களுக்கான குடியிருப்பை திறந்து வைத்து பேசிய அவர், நாட்டிலேயே 2ஆவது பெரிய பொருளாதார மாநிலம், தமிழ்நாடு என பெருமிதம் தெரிவித்தார். மேலும், மகளிருக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு முனைப்புடன் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 16, 2025
அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்த தனுஷ்

‘இட்லி கடை’ படத்தை பாராட்டிய அண்ணாமலைக்கு தனுஷ் நன்றி கூறியுள்ளார். படத்தில் எழுத்து, இயக்கம், நடிப்பு என மூன்றையும் சிறப்பாக கையாண்டு அற்புதமான படைப்பை, தனுஷ் வெளிக்கொண்டு வந்திருப்பதாக அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு X-ல் பதிலளித்துள்ள தனுஷ், உங்களின் அன்பான வார்த்தைகளுக்கும், பாராட்டுகளுக்கும் படக்குழு சார்பில் நன்றி என்றும் நேரம் ஒதுக்கி படம் பார்த்ததற்கு மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார்.
News October 16, 2025
FLASH: விலை மளமளவென குறைகிறது

விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவரும் வெள்ளியின் விலை, சீக்கிரமே சரிவை சந்திக்குமாம். கடந்த தீபாவளியில் 1 கிலோ ₹1.1 லட்சமாக இருந்த நிலையில், ஒரே ஆண்டில் விலை டபுளாகியுள்ளது. இந்நிலையில், தீபாவளிக்கு பிறகு வெள்ளி விலை குறையும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். விநியோகம் அதிகரிப்பது, முதலீட்டாளர்கள் மாற்றுவழியில் கவனம் செலுத்துவது உள்ளிட்டவை விலை சரிவுக்கு காரணமாக அமையும் என அவர்கள் கூறுகின்றனர்.
News October 16, 2025
ரஷ்ய எண்ணெய், இந்தியாவுக்கு பெரும் பலன்: ரஷ்ய தூதர்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது இந்திய மக்கள் மற்றும் அவர்களின் பொருளாதாரத்திற்கு பெரும் பலனளிப்பதாக, இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் கருத்துக்கு பதில் அளித்துள்ள ரஷ்ய தூதர் அலிபோவ், அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு சுதந்திரமாக முடிவெடுக்க உரிமை உண்டு எனவும், அவர்களின் முடிவுகளில் ரஷ்யா தலையிடாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.