News August 17, 2024

கடன் செயலிகளுக்கு செக் வைத்த RBI

image

P2P கடன் செயலிகள் மற்றும் NBFC கடன் நிறுவனங்களுக்கான விதிகளை RBI கடுமையாக்கியுள்ளது. கடன் செயலிகளில் ஏராளமான விதி மீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், அவை எந்தவொரு காப்பீடு திட்டத்தையும் விற்பனை செய்யக்கூடாது எனவும், தகுதி இல்லாத நபர்களுக்கு கடன் வழங்கக் கூடாது என்றும் RBI அறிவுறுத்தியுள்ளது. P2P செயலிகள் கடன் வழங்குபவருக்கும், பெறுபவருக்கும் இடைத்தரகராக செயல்படுகின்றன.

Similar News

News August 15, 2025

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ‘விருக்ஷசனம்’!

image

✦இதய ஆரோக்கியம் மேம்படவும், கால் தசைகள் வலுப்பெறவும் உதவுகிறது
➥ஒரு காலில் நின்று கொண்டு, மற்றொரு காலை தொடை மீது வைத்து நிற்கவும்.
➥கைகளை தலைக்குமேல் உயர்த்தி, ஒன்றுடன் ஒன்று சேர்த்து வைக்கவும்.
➥30- 45 விநாடிகள் வரை இந்த நிலையில் இருந்து விட்டு, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும்.

News August 15, 2025

EPS-க்கு மீண்டும் நெருக்கடி கொடுக்கும் OPS, சசிகலா!

image

ADMK, பல அணிகளாக பிரிந்து கிடந்தாலும் பொதுவெளியில் சில மாதங்களாக மோதல்கள் இல்லாமல் இருந்தது. இது, ஒன்றிணைப்புக்கான சமிஞ்ஞை என கூறப்பட்டது. ஆனால், அதற்கான காலம் கடந்துவிட்டது என EPS அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில், ADMK பொதுச்செயலாளர் எனக் கூறி சசிகலா வெளியிட்ட சுதந்திர தின வாழ்த்து, தலைமை பண்பு இல்லாத EPS என <<17402506>>OPS விமர்சனம்<<>> என்று மீண்டும் அதிமுகவின் தலைமை பதவிக்கு நெருக்கடியை கொடுக்கின்றனர்.

News August 15, 2025

திமுக கூட்டணிக்கு தற்போது தான் ரோஷம் வந்துள்ளது: EPS

image

தூய்மை பணியாளர்களின் வாக்குகளை பெறுவதற்காக எதிர்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். தற்போது அவர்களை சமாதானப்படுத்த அறிவிப்புகளை வெளியிடுகிறார் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். ஆம்பூரில் மக்கள் மத்தியில் பேசிய இபிஎஸ், தூய்மை பணியாளர்கள் கைது செய்ததை கண்டித்து MP சு.வெங்கடேசன், பெ.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளதாகவும், தற்போது தான் அவர்களுக்கு ரோஷம் வந்துள்ளதாகவும் கூறினார்.

error: Content is protected !!