News August 17, 2024
திருச்சி ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

திருச்சி கே.கேநகரில் இன்று சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குனர் டேவிட்சன் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மத்திய மண்டல ஐஜி, டிஐஜி,கமிஷனர்,எஸ்.பி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், திருச்சியில் அதிக குற்ற சம்பவங்கள் நடைபெறும் நிலையில், ரவுடி பட்டியலை எடுத்து தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டது.
Similar News
News January 18, 2026
திருச்சி: இன்று தை அமாவாசை – இதை மறக்காதிங்க

தை அமாவாசையான இன்று, முன்னோர்களுக்கு உங்களால் இயன்றதை கொண்டு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களது பசி தாகம் தீர்ந்து வாழ்த்துவார்கள் என்பது ஐதீகம். இதனை செய்தால் வீடுகளில் மகிழ்ச்சி பொங்கி, சுப காரியத்தின் தடைகள் விலகி, சொத்துகள் சுகம் கிடைக்கும், நோய் நோடிகள் அடையும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இன்று மாலை, அருகில் உள்ள கோயிலுக்கு சென்று, நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இதனை SHARE பண்ணுங்க.
News January 18, 2026
திருச்சி: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

திருச்சி மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்.
1. உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும்.
2. பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும்.
3. பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 18, 2026
திருச்சி: தண்டவாளத்தில் சடலமாக கிடந்த வாலிபர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான வாலிபர் கூத்தூர் ரயில்வே தண்டவாளப் பகுதியில் நேற்று சடலமாக கிடந்தார்.
இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் திருச்சி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.


