News August 17, 2024
புத்தகத் திருவிழாவில் வினாடி வினா போட்டிகள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறப்பு வினாடி வினா போட்டிகள் நாளை மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையாளராக இதில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News August 11, 2025
காரியாபட்டியில் அமைச்சரின் அறிவிப்பு என்னாச்சு

காரியாபட்டி அரசு மருத்துவமனையில் தினமும் சிகிச்சைக்காக சுற்றுவட்டார கிராம மக்கள் பலர் வந்து செல்கின்றனர். இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது மகப்பேறு மருத்துவர் இங்கு உடனடியாக நியமிக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் இதுவரை மருத்துவர் நியமிக்கப்படாததால் பொதுமக்கள் விரக்தியடைந்துள்ளனர்.
News August 11, 2025
மானிய விலையில் காய்கறி, பழச்செடிகள் தொகுப்பு

விருதுநகர் மாவட்டத்தில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டத்தின் கீழ் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற 6 வகையான விதைகள் அடங்கிய தொகுப்பு 100% மானியத்தில் ரூ.60 வீதம் 41,500 எண்கள் வழங்கப்பட உள்ளது. இதேபோல் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை பழச்செடித் தொகுப்பு 100% மானியத்தில் 25,850 எண்கள் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உழவன் செயலியில் பதிவு செய்யலாம்.
News August 11, 2025
விருதுநகர்: பனை சாகுபடி செய்ய விண்ணப்பிக்கலாம்

(ஆகஸ்ட்.11) விருதுநகர் மாவட்டத்திற்கு 2025-26 ஆம் நிதியாண்டில் பனை மேம்பாட்டு இயக்கத் திட்டத்திற்கு ரூ.6.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் வயலின் வரப்புகளிலும், வயல் ஓரங்களிலும் பனை மரத்தை நடவு செய்ய தோட்டக்கலைத்துறை மூலம் 40,000 பனை விதைகள் விநியோகம் செய்ய ரூ.1.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.