News August 17, 2024
திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி எம்பி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது முகநூல் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் வழிநின்று சமத்துவம் – சகோதரத்துவம் – சமூகநீதி காப்பதற்காக சமரசமின்றி பயணித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் குளிர் பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘டித்வா’ புயல் காரணமாக நவம்பர் 27 முதல் சனிக்கிழமை வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை இல்லாத ஞாயிற்றுக்கிழமை இரவில், வெப்பநிலை சுமார் 22 டிகிரிக்கு குறைந்ததால் தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டப் பகுதிகளில் கடுங்குளிர் நிலவியது. கடல் அமைதியாகக் காணப்பட்டது.
News November 30, 2025
தூத்துக்குடி: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

தூத்துக்குடி மாவட்ட மக்களே, பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்.
News November 30, 2025
தூத்துக்குடி: வடமாநில தொழிலாளிக்கு கத்திக்குத்து

கோவில்பட்டி பகுதியில் புதுடில்லியை சேர்ந்தவர் மாலிக். இவர் கோவில்பட்டியில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது அறையில் பாடலை சத்தமாக வைத்து கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை இவரது அறையில் தங்கியிருக்கும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன்ராஜ் தட்டி கேட்டதுடன் மாலிக்கை கத்தியால் குத்தியுள்ளார். இது சம்பந்தமாக கோவில்பட்டி மேற்கு போலீசார் மோகன்ராஜை கைது செய்தனர்.


