News August 17, 2024
சிறுநீரை கட்டுப்படுத்தி வைத்திருந்தால்…

சிறுநீரை நேரம் தாழ்த்தாமல் கழித்து விட வேண்டும். இல்லையேல் கீழ்காணும் 5 பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 1) சிறுநீரை கட்டுப்படுத்தி வைத்தால் சிறுநீரகத்தில் கல் உருவாக காரணமாகும் 2) சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட வழிவகுக்கும் 3) சிறுநீர் பை சுமை தாங்க முடியாமல் சேதமாகும் 4) சிறுநீரை தேக்கி வைக்கும் சிறுநீர் பையில் வலி உருவாகும் 5) இடுப்புப் பகுதி தசைகளை பலவீனமாக்கும்.
Similar News
News December 17, 2025
புது வாழ்வளித்த CSK-வுக்கு நன்றி.. நெகிழ்ந்த சர்பராஸ்!

2015-ல் குறைந்த வயதில் IPL-ல் விளையாடியவர்(17 வருடம் 177 நாள்கள்) என்ற பெருமையை பெற்ற சர்பராஸ் கான் பல ஏற்ற இறக்கங்களை கண்டவர். பல அணிகள் மாறி, Fitness இல்லை என்ற ஓரங்கட்டப்பட்டவர், உடல் எடையை குறைத்து 2025 SMAT தொடரில் அசத்தலான ஃபார்மில் உள்ளார். ஒரு சான்ஸ் கிடைக்காதா என காத்திருந்தவரை, CSK வாங்கியுள்ளது. இதனால், புது வாழ்வளித்த CSK-வுக்கு நன்றி’ என அவர் தெரிவித்துள்ளார்.
News December 17, 2025
டிரம்ப் அதிரடி: மேலும் 7 நாடுகளுக்கு சிக்கல்

USA-வில் நுழைய ஏற்கெனவே <<18410987>>12 நாடுகளை<<>> சேர்ந்தவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 7 நாடுகளுக்கு தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சிரியாவில் 3 அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிரியா, மாலி, தெற்கு சூடான் உள்ளிட்ட 7 நாடுகளை சேர்த்து மொத்தம் 19 நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீன பாஸ்போர்ட் கொண்டவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
News December 17, 2025
தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹12,400-க்கும், சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹99,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


