News August 17, 2024
மயிலாடுதுறையில் விருது பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டு சாதனை புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24-ந் தேதி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதினை பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
மயிலாடுதுறை: டிகிரி போதும்..அரசு வேலை!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 3073 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2.பணி : Sub-Inspector
3.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
5.வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6.கடைசி நாள்: 16.10.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 15, 2025
மயிலாடுதுறைக்கு ஆரஞ்சு அலெர்ட்!

தமிழகத்தில் நாளை (அக்.16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று (அக்.15) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
News October 15, 2025
மயிலாடுதுறையில் போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி

பொதுமக்களிடையே போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் உதவி ஆணையர் மாணிக்கராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முத்துவடிவேல் மற்றும் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.