News August 17, 2024
கனமழை: ஆட்சியர்களுக்கு பறந்தது உத்தரவு

கனமழை எச்சரிக்கை காரணமாக 22 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வருவாய்த்துறை வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ஆட்சியர்கள் பின்பற்றுமாறும், கனமழைக்கு முன்னதாகவே, தேவைப்படக்கூடிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை, முன்கூட்டியே தயார் நிலையில் வைக்கும்படியும் கூறியுள்ளது.
Similar News
News August 15, 2025
வைரமுத்து ‘Me too’ குற்றவாளி: ஒருமையில் சாடிய H.ராஜா

வைரமுத்து ஒரு ‘Me too’ குற்றவாளி, அவர் மீது பல பெண்கள் புகார் அளித்துள்ளதாக H.ராஜா கடுமையாக சாடியுள்ளார். திமுக ஆட்சி என்பதால் வைரமுத்து இன்னும் கைது செய்யப்பட்டவில்லை என்றும் விமர்சித்துள்ளார். ராமரை அவமரியாதையாக பேசிய வைரமுத்து ஒரு மனநோயாளி எனவும் அவரை ஒருமையில் சாடியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் <<17369941>>வைரமுத்து ராமரை இழிவுபடுத்தியதாக <<>>ஏற்கெனவே போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
News August 15, 2025
ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓடாது: PM மோடி ஆவேசம்

பஹல்காமில் மதத்தின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்து அவர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளதாக சுதந்திர தின உரையில் PM மோடி குறிப்பிட்டுள்ளார். செங்கோட்டையில் ஆவேசமாக பேசிய அவர், பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்கள் நம்மிடம் எடுபடாது என்றார். சிந்து நதி இந்திய விவசாயிகளுக்கு சொந்தமானது எனவும் அதனை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம், ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓடாது என்றார்.
News August 15, 2025
SPORTS ROUNDUP: விதிமீறல்.. SA வீரரை தண்டித்த ICC!

◆சின்சினாட்டி ஓபன்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னர் அரையிறுதிக்கு முன்னேறினார்.
◆2-வது T20-யில் ஆஸி. வீரரின் Ben Dwarshuis-ன் விக்கெட்டை வீழ்த்திய SA வீரர் கார்பின் போஷ், விதியை மீறி கொண்டாடியதால், அவருக்கு ICC ஒரு Demerit பாயிண்ட் கொடுத்துள்ளது.
◆WI-க்கு எதிராக தொடரை இழந்த PAK. அணி வீரர்கள் சொந்த ரெக்கார்டுக்காக விளையாடுவதால் தான் தோல்வி என Ex வீரர் சோயிப் அக்தர் விமர்சனம்.