News August 17, 2024
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒவ்வொரு காலாண்டிலும் 18 வயது நிறைவடைந்த இளைஞர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருப்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News August 9, 2025
மயிலாடுதுறை: கலெக்டருக்கு சிலம்பம் சுற்றி காட்டிய சிறுவன்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த முடி திருச்சம்பள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த சிலம்பம் விளையாடும் சிறுவர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது சிலம்பு சுற்றி காண்பித்த சிறுவனை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
News August 9, 2025
241 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

சுதந்திர தினத்தை ஒட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை 241 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
மயிலாடுதுறை: ரூ.1,42,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <