News August 17, 2024
நெல்லை to பாட்னாவுக்கு இரவு சிறப்பு ரயில்

நெல்லை-பாட்னா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று(ஆக.,17) இரவு 9:45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு 3ஆவது நாள் காலை 5.45 மணிக்கு பாட்னாவிற்கு செல்ல உள்ளது. இந்த ரயிலில் ஒரு AC இரண்டடுக்கு பெட்டி, 2 AC மூன்றடுக்கு பெட்டிகள், 9 ஸ்லீப்பர் பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் இடம் பெற்றுள்ளன. இந்த ரயிலை பயன்படுத்திக்கொள்ள ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு அறிவிப்பு செய்துள்ளது.
Similar News
News September 10, 2025
நெல்லை ரயில் டிக்கெட் BOOK பண்ண போறீங்களா??

நெல்லை மக்களே! TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??
1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க
2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.
3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.
இனி டிக்கெட் முன்பதிவுக்கு அதிகம் பணம் கொடுத்து ஏமாறாதீங்க. மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க…!
News September 10, 2025
நெல்லை மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்

இன்று காலை 10 மணிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
பாளையங்கோட்டை என் ஜி ஒ ஏ காலனி பகுதியில் 2 இடங்களில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா காலை 10:30 மணிக்கு அப்துல் கப் எம்எல்ஏ தலைமையில் நடக்கிறது.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை 10:30 மணிக்கு வாராந்திர குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
News September 10, 2025
நெல்லை: அரசு பள்ளி முன் பெற்றோர்கள் போராட்டம்

மருதகுளம் செல்லையா அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் ஒரு மாணவனுக்கு மட்டும் டிசி வழங்கினார். இதனால் மாணவனின் பெற்றோர், உறவினர்கள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாணவனை மீண்டும் சேர்க்க மறுத்ததால், தலைமை ஆசிரியர் அலுவலகம் முன்பு தர்ணா நடத்தினர். மூன்றடைப்பு போலீசார் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.