News August 17, 2024
நாமக்கல் மாவட்டத்தில் 138.20 மிமீ மழை பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 17ஆம் தேதி காலை வரை பதிவான மழை அளவு விபரம்: எருமப்பட்டி 3 மிமீ, மோகனூர் 52 மிமீ, நாமக்கல் 3 மிமீ, பரமத்திவேலூர் 74 மிமீ, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் 6.20 மிமீ என மொத்தம் 138.20 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News August 31, 2025
நாமக்கல்: இலவச தையல் மிஷின் வேணுமா? உடனே APPLY

நாமக்கல் மாவட்டத்தில், சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தையல் மிஷின் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.72,000க்கும் குறைவாக உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது நாமக்கல் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News August 31, 2025
நாமக்கல்: ரூ.1,500 வேண்டுமா? இதை பண்ணுங்க!

நாமக்கல்: மண்புழு உரம் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உரப்படுக்கைகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் மண்புழு உரம் தயாரிக்கத் தேவையான பொருட்களை வாங்கி, அதற்கான பட்டியலை சமர்ப்பித்தால், ரூ.1,500 மானியமாகப் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது <
News August 31, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 30) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 என நிர்ணயிக்கப்பட்டது. மழை, குளிர் போன்ற காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல், ரூ.5.15 ஆகவே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது.