News August 17, 2024
75 இடங்களில் மின்சார வாகன ஸ்வாப்பிங் நிலையங்கள்

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், அதில் சார்ஜ் செய்யும் நேரத்தை மிச்சப்படுத்தவும், சென்னையில் 75 இடங்களில் அரசுடன் இணைந்து தனியார் நிறுவனம் 75 இடங்களில் ஸ்வாப்பிங் நிலையங்களை அமைக்கிறது. இங்கு சார்ஜ் காலியான பேட்டரியை ஒப்படைத்து விட்டு, 2 முதல் 5 நிமிடங்களில் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை பெற முடியும். பேட்டரியின் தன்மைக்கு ஏற்ப கட்டணம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் நேரடி மாணவர் சேர்க்கை செப்.30 வரை நீட்டிக்கப்படுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.இதில் 14 வயது முதல் 40 வரை உள்ள ஆண்கள் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். பயிற்சியில்
சேருபவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் கிடையாது.
News September 18, 2025
சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

கிண்டி ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் நாளை (செ.19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் 2 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 8th,12th, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு <
News September 18, 2025
சென்னை: ட்ரெண்டாகும் AI புகைப்படம் எச்சரிக்கை!

சென்னை மக்களே Google Gemini பெயரில் வைரலாகும் Nano Banana Al ட்ரெண்ட் தொடர்பாக, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை போலியான இணையதளங்கள் அல்லது செயலிகளில் பதிவேற்ற வேண்டாம். ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிகணக்கு போன்ற தனிநபர் விபரங்கள் திருடப்படலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்க