News August 17, 2024
முரசொலிமாறன் பிறந்தநாள்: திமுகவினர் மரியாதை

மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலிமாறன் 91வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் பிறந்த நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அவரின் உருவபடத்திற்கு திமுக மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Similar News
News September 17, 2025
புதுவையில் அரசு பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

புதுவை மாநிலம் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட புதுக்குப்பம் அரசு தொடக்க பள்ளியில், இன்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்பொழுது பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் கல்வித்திறனை கேட்டறிந்த ஆட்சியர் மாணவர்களிடம் கல்வி சம்பந்தமாக கலந்துரையாடினார்கள். மேலும் நன்கு படிக்க வேண்டும் எனவும் மாணவர்களிடம் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
News September 17, 2025
காரைக்கால் அருகே மாவட்ட ஆட்சியர் ஆய்வு

காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி பகுதியில் உள்ள கிராம தொழிற்பேட்டை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் இன்று திடீர் கள ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள், உற்பத்தி திறன், வணிகம் குறித்து ஆய்வு செய்ததுடன் நிறுவனங்களின் தேவைகள் குறித்தும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் அதிகாரியுடன் ஆட்சியர் கலந்துரையாடினார்கள்.
News September 17, 2025
புதுச்சேரியில் மத்திய அரசு திட்ட துவக்க விா

ஆரோக்கியமான பெண்கள், வலிமையான குடும்பம் சுவஸ்த்ய நாரி சக்த் பரிவார் அபியான் என்கிற புதிய திட்டத்தை பாரத பிரதமர் மோடி அறிவித்து துவக்கி உள்ளார். கம்பன் கலையரங்கில் இந்த திட்டத்தின் துவக்க விழா நடந்தது. இதில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.