News August 17, 2024
கனமழை: கோவை கலெக்டருக்கு உத்தரவு

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஏற்கனவே மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியருக்கு இன்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News October 26, 2025
3 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை இல்லை: வானதிசீனிவாசன்

கோவை எம்எல்ஏ வானதிசீனிவாசன் இன்று அறிக்கை வெளியிட்டார்.அதில்,
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் ‘மாணவர் சேர்க்கை இல்லை’ என்ற காரணத்தைக் கூறி 51 சமூக நீதி விடுதிகள் மூடப்பட்டுள்ளன. விடுதிகளில் மாணவர் சேர்க்கை இல்லை என்றால் காரணத்தை கண்டறிந்து அதை சரி செய்ய வேண்டும். மாறாக, அதையே காரணம் காட்டி விடுதிகளை முடிவிடக் கூடாது. மேலும் சமூக நீதி விடுதிகளை மூடிவிட்டு சமூக நீதி பேசுகிறது திமுக அரசு என்றார்.
News October 26, 2025
கருமத்தம்பட்டியில் VIRAL PHOTO

கோவை, கருமத்தம்பட்டி அருகே சென்னியாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இது மிகவும் பழமையான திருக்கோவில். இக்கோவிலில் சூரசம்ஹார விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த வருடம் திருக்கல்யாண உற்சவத்திற்கு கோவில் நிர்வாகத்தினர் பத்திரிகை அடித்து வித்தியாசமான முறையில் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இப்படம் VIRAL ஆகி வருகிறது.
News October 26, 2025
கோவை: அரசு மருத்துவமனை தொடர்பு எண்கள்

1) கோவை அரசு தலைமை மருத்துவமனை – 0422-2301393. 2) சிங்காநல்லூர் அரசு இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை – 0422-2574391. 3) மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை – 04254-222027. 4) பொள்ளாச்சி அரசு மருத்துவமனை – 04259-229322. 5)வால்பாறை அரசு மருத்துவமனை – 04253-222533.
மிக முக்கிய தொடர்பு எண்களான இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


