News August 17, 2024
புவி வெப்பமடைதலை தடுக்கும் பயோ மெட்டீரியல்?

புவி வெப்பமடைதலை வேகப்படுத்துவதில் கார்பன் டை ஆக்சைடு (CO2) முக்கிய பங்குவகிக்கிறது. அதனை சீர்செய்ய இந்திய மாணவர் பிராந்தர் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். லண்டன் பல்கலை.,யில் முதுகலை பயிலும் அவர், வளிமண்டலத்தில் இருந்து CO2-வை பிரித்தெடுக்க நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தும் புதிய கட்டுமான பயோ மெட்டீரியலை உருவாக்கியுள்ளார். இது நடைமுறைக்கு வந்தால் கார்பன் தடயத்தை குறைக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
Similar News
News August 18, 2025
அணில் மரத்தில் இருக்கணும்: விஜய்யை சீண்டிய சீமான்

தவெகவின் கொள்கை என்னவென்று கேட்டால் ‘தளபதி’ என கோஷமிடுவதாக சீமான் சாடியுள்ளார். செஞ்சி நாதக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், புலி வெறிகொண்டு வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது அணில் குறுக்கும் மறுக்கும் ஓடுவதாகவும், அணில் பத்திரமாக மரத்தில் ஏறி இருக்க வேண்டும் என்றும் விமர்சித்தார். ஆரம்பத்தில் தம்பி என விஜய்யை அழைத்து வந்த அவர், தவெக முதல் மாநாட்டுக்குப் பிறகு கடுமையாக விமர்சித்து வருகிறார்.
News August 18, 2025
தமிழர் என்பதற்காக சி.பி.ஆரை ஏற்க முடியுமா? திமுக

துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக அறிவித்துள்ளது. தமிழரை பாஜக களமிறக்கியதால், திமுக & அதன் கூட்டணி கட்சிகள் ஆதரிக்குமா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில், தமிழர் என்பதற்காக பாஜக வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியுமா? I.N.D.I.A. கூட்டணித் தலைவர்கள் எடுக்கும் முடிவை திமுக ஏற்றுக்கொள்ளும் என்று திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
₹400 கோடி வசூலை நெருங்கிய ‘கூலி’!

ரஜினி- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், வசூல் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. 4 நாள்களில் படம் இந்தியாவில் ₹194 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உலகளவில் படம் ₹400 கோடியை குவித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த வருடத்தில் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்ற சாதனையையும் ‘கூலி’ செய்துள்ளது.