News August 17, 2024

நாமக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 25 மி. மீட்டரும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 11 மி.மீ.யும், அடுத்த 2 நாட்கள் முறையே 7 மற்றும் 8 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரி ஆகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News December 15, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று டிசம்பர்-15ஆம் தேதி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். இதனையடுத்து மாற்றுத்திறனாளிடமிருந்து ஆட்சியர் துர்காமூர்த்தி கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து தேர்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

News December 15, 2025

திருச்செங்கோடு அருகே சோகம்!

image

திருச்செங்கோடு அருகே சோமனம்பட்டியில் அய்யனார் (21) கடந்த 07-டிசம்பர் அன்று வயிற்று வலி காரணமாக விஷம் குடித்துள்ளார். முதலில் உறவினர்கள் அவரை ராசிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பிறகு மேல்சிகிச்சைக்கு கோயம்புத்தூர் KMCH மருத்துவமனையில் அனுப்பப்பட்டார். ஆனால், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து எலச்சிபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 15, 2025

நாமக்கல்: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

image

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.மேலும், மாத சம்பளமாக ரூ.32,020 – ரூ.96,200 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே பதிவு செய்து உங்கள் வேலையை உறுதி செய்யுங்கள். இதை அதிகம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!