News August 17, 2024
சிவகாசி அருகே முதியவர் வெட்டி கொலை

சிவகாசி அருகே எரிச்சநத்தம் -அழகாபுரி சாலையில் உள்ள தனியார் மினரல் வாட்டர் நிறுவன இரவு நேர காவலாளியாக பணியாற்றி வருபவர் குமிழங்குளத்தை சேர்ந்த சௌந்தரராஜன்(84). இன்று அதிகாலை மர்ம நபர்கள் இவரை வெட்டி கொலை செய்து அவர் அணிந்திருந்த நாலரை பவுன் தங்கச் செயின், மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். இக்கொடூர சம்பவம் குறித்து, எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
Similar News
News October 28, 2025
சாத்தூர்: மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மணியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மரியசெல்வம்(39). இவர் கடந்த 2014-ம் ஆண்டு கோல்வார்பட்டி அணை பகுதியில் டிராக்டரில் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கு இன்று சாத்தூர் சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துமகாராஜன் மணல் திருடிய மரிய செல்வத்திற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News October 28, 2025
விருதுநகர்: 12th முடித்தால் HEALTH INSPECTOR வேலை.,

விருதுநகர் மக்களே, தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் நவ.16க்குள் இங்கு <
News October 28, 2025
விருதுநகர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு எங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும்.
1.இங்கு<
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க. 7 நாளில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.


