News August 17, 2024
மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அடுத்த சிறுவாடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாதவன் (56).விவசாயம் செய்து வந்த இவர், நேற்று காலை வழக்கம்போல் தனது நிலத்திற்கு மாடுகளை மேய்ச்சலுக்காக ஒட்டிச்சென்றார். அப்போது, சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்த கிருபாகரன் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில், காட்டுப்பன்றி வராமல் இருக்க அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News January 14, 2026
விழுப்புரம்: சமத்துவ பொங்கல் விழா

விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியம் அருணாபுரம் ஊராட்சியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சமத்துவ பொங்கல் விழா ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் நடைபெற்றது. திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.பொன்முடி முன்னிலையில் இன்று (ஜன.14) நடைபெற்றது. உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) வெங்கடேஷ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News January 14, 2026
விழுப்புரம்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News January 14, 2026
விழுப்புரம்: நிரந்தர பந்தல் அமைக்க ரூ.3 லட்சம் மானியம்!

விழுப்புரம் மக்களே.., பீர்க்கன், பாகல், புடலை உள்ளிட்ட கொடி வகை காய்கறிகளுக்கு பந்தல் அமைக்க செலவு அதிகம் என்ற கவலை இனி வேண்டாம். தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், நிரந்தர பந்தல் அமைத்து கொடிவகை காய்கறிகள் / பழங்களை சாகுபடி செய்ய ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் அருகில் இருக்கும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். SHARE பண்ணுங்க!


