News August 17, 2024
சிவகங்கையில் போலீசாருக்கு பயண உணவு படி இழுபறி

சிவகங்கை மாவட்ட போலீஸ் ஸ்டேசன்களில் கிரேடு 2 முதல் தலைமை காவலர் வரை உள்ள போலீசாருக்கு வழங்க வேண்டிய பயண உணவுப்படி, கூடுதல் பணி நாள் சம்பளம் ஆகியன பல மாதங்களாக வழங்கபடவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனை சிவகங்கை எஸ்பி காலதாமதமின்றி கிரேடு 2 முதல் தலைமை காவலர்கள் வரை கிடைக்க வேண்டிய படியை வழங்க வேண்டும் என போலீசார் தரப்பில் எதிர்பார்க்கின்றனர்.
Similar News
News November 6, 2025
தேவகோட்டை மாணவர் தேசிய போட்டிக்கு தேர்வு

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான 66 ஆவது குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள் தஞ்சாவூரில் நடைபெற்றன. அதில் தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி மாணவர் தீஷ்வா உயரம் தாண்டுதல் போட்டியில் மாநில அளவில் வெள்ளிப் பதக்கம் பெற்றதோடு, டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.
News November 6, 2025
சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்

சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️ SP – 04575-240427
▶️ ADSP – 04575-243244, 04575240587
▶️ திருப்பத்தூர் (DSP) – 04577-26213
▶️ தேவகோட்டை (DSP) – 04561-273574
▶️ காரைக்குடி (DSP) – 04565-238044
▶️ மானாமதுரை (DSP) – 04574-269886
▶️ சிவகங்கை (DSP) – 04575-240242
▶️ Share This Useful Content…
News November 6, 2025
சிவகங்கை: அழகுக்கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் ஒப்பனை அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற (Tattoo Making Course, Aesthetic Training Course and Semi Permanent Makeup Courses) பயிற்சிகள் பெறுவதற்கு, தகுதியின் அடிப்படையில் www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக பதிவு மேற்கொண்டு பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.


