News August 17, 2024

விஜய்க்கு நெருக்கடி தரும் அமைச்சர்கள்?

image

அமைச்சர்களின் மறைமுக நெருக்கடியால், விஜய் தனது கட்சி மாநாட்டை விக்கிரவாண்டிக்கு மாற்றியதாகக் கூறப்படுகிறது. திருச்சியில் மாநாடு நடத்த இடம் பார்த்த அவருக்கு, பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. தனியார், ரயில்வே இடங்களை இறுதி செய்தும், மறைமுக நெருக்கடியால் அவை கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. தற்போது விக்கிரவாண்டி இடத்தையும் தரக்கூடாது என அமைச்சர் ஒருவர் அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News November 9, 2025

1 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2GB இலவசம்

image

தீபாவளியையொட்டி அறிவிக்கப்பட்ட BSNL-ன் ₹1 பிளான் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ₹1-க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாள்களுக்கு 2 GB டேட்டா, 100 SMS, அன்லிமிட்டெட் கால்ஸ் ஆகியவற்றை பெறலாம். புதிதாக சிம் வாங்குவோருக்கே இந்த ஆஃபர் பொருந்தும். நவ.15-ம் தேதியுடன் இந்த ஆஃபர் முடிவடைவதால் உடனே முந்துங்கள். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள BSNL மையங்களை அணுகவும். SHARE IT

News November 9, 2025

நீங்க சரியா தூங்குறீங்களா? ஈசியா செக் பண்ணுங்க!

image

இந்த அறிகுறிகள் இருக்கா? ✦தொடர்ந்து 7- 9 மணிநேரம் வரை நல்ல தூக்கம் வரும் ✦படுக்க சென்ற 10- 20 நிமிடங்களுக்குள் தூக்கம் வந்துவிடும் ✦ஒன்று அல்லது இரண்டு முறை விழிப்பதை தவிர்த்து, நல்ல தூக்கம் கிடைக்கும் ✦காலையில் எனர்ஜியாக உணருவீர்கள் ✦தூங்கி எழுந்ததும், நன்கு உறங்கிய திருப்தி கிடைக்கும். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், நீங்கள் நன்றாக உறங்குகிறீர்கள் என அர்த்தம். SHARE IT.

News November 9, 2025

சற்றுமுன்: பிதாமகன் காலமானார்

image

இந்தியாவில் கணினி அறிவியல் கல்வியின் ‘பிதாமகன்’ என போற்றப்படும் மூத்த பேராசிரியர் V.ராஜாராமன்(92) காலமானார். நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களான IIT, IISc உள்ளிட்டவைகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்துள்ளார். TCS-ன் முதல் CEO ஃபக்கீர் சந்த் கோஹ்லி, Infosys நிறுவனர் NR நாராயண மூர்த்தி ஆகியோர் இவரது மாணவர்கள்தான். இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு 1998-ல் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்திருந்தது.

error: Content is protected !!