News August 17, 2024

திண்டுக்கல்: மரநாயை வேட்டையாடிய மறறொருவர் கைது

image

ஒட்டன்சத்திரம் வனச்சரகத்துக்குட்பட்ட பூதமலை பகுதியில் கடந்த 8ஆம் தேதி மரநாயை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட வழக்கில் 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த கண்ணப்பன், காளிமுத்து ஆகியோரை வனத்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் காளிமுத்துவை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கண்ணப்பனை தேடி வருகின்றனர்.

Similar News

News December 12, 2025

அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் டிசம்பர் 13ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும். குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, புதிய அட்டை கோரிக்கை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்தார்.

News December 12, 2025

24 தொகுதிகளில் தான் அதிமுக போட்டி – அமைச்சர் பெரியசாமி!

image

ஆத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “2026 தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என அதிமுகவினர் சொல்கிறார்கள். அந்த அளவிற்கு போட்டியிடுவதற்கு அவர்களுக்கு இடமில்லை. அதிமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு 210 தொகுதி போக மீதமுள்ள 24 தொகுதிகளில் தான் அதிமுக போட்டியிடவேண்டிய நிலைமை உள்ளது. இவர்களால் எப்படி 210 தொகுதிகளில் வெற்றிபெற முடியும்” என்றார்.

error: Content is protected !!