News August 17, 2024
பாட புத்தக விலை உயர்வை திரும்ப பெறுக: சரத்குமார்

பாடப்புத்தக விலை உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற பாஜக மூத்த தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், பாடப்புத்தக விலையை 40% அளவு அரசு உயர்த்தியிருப்பது ஏற்புடையது அல்ல. விலையை உயர்த்தாமல் அதற்கான தொகையை மானியமாக வழங்கியிருக்கலாம் என்று கூறியுள்ளார். புத்தக விலை ஏற்றம், மாணவர்களின் இடைநிற்றலுக்கு காரணமாக அமையக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 26, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை நிராகரிப்பு.. அரசு புதிய தகவல்

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வை நவம்பருக்குள் முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. குடும்ப வருமானம் உள்ளிட்ட தகவல்களை மறைத்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அண்மையில் அரசு பணியில் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு ₹1,000 கிடைக்காது. விண்ணப்பித்தவர்களின் ரேஷன் கார்டில் சரியான முகவரி இல்லை என்றாலும் ₹1,000 கிடைப்பதில் சிக்கல் வரும்.
News October 26, 2025
பெண் டாக்டர் தற்கொலை: ராகுல் சரமாரி கேள்வி

மகாராஷ்டிரா <<18092365>>பெண் டாக்டர் தற்கொலை <<>>வழக்கில், போலீஸ் SI கோபால், மென்பொறியாளர் பிரசாந்தை போலீசார் கைது செய்தனர். இருப்பினும், குற்றவாளிகளை ஆளும் BJP அரசு காப்பாற்ற முயல்வதாகவும், ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் அந்த டாக்டரை பொய்யான உடற்கூராய்வு அறிக்கையை கொடுக்க கூறி வற்புறுத்தியதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானத கூறி அந்த டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
News October 26, 2025
பதற்றத்தை குறைக்க சில டிப்ஸ்

பதற்றம் நமது அன்றாட வாழ்க்கையில் அமைதியை குலைத்து, வேலை, உறக்கம், உறவுகள் போன்றவற்றை பாதிக்கக்கூடும். மேலும், தலைவலி, உயர் ரத்த அழுத்தம், சோர்வு, மனஅழுத்தம் போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தும். எனவே, பதற்றத்தை குறைப்பது மிக அவசியம். இதற்கு என்ன செய்யலாம் என்று, மேலே பகிர்ந்துள்ள போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.


