News August 17, 2024
நீலகிரியில் சூர்யா படப்பிடிப்பு: ரஷ்யர்கள் வெளியேற்றம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்து வரும் நடிகர் சூர்யா படப்பிடிப்பில் நடிப்பதற்காக, 115 ரஷ்யா துணை நடிகர்கள் வந்து தங்கி இருந்தனர். இவர்கள் குறித்து விடுதி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் இருந்துள்ளனர். இதனால், எஸ்பி அலுவலகத்திற்கு முறையான தகவல் கொடுக்காததைக் குறித்து விளக்கம் அளிக்குமாறு போலீசார் விடுதிக்கு நோட்டீஸ் வழங்கினர். இதைத் தொடர்ந்து நேற்று ரஷ்ய நடிகர்கள் வெளியேற்றப்பட்டனர்.
Similar News
News August 14, 2025
நீலகிரி: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

நீலகிரி: உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க
நீலகிரி – 9445000258
உதகமண்டலம் – 9445000259
குன்னூர் – 9445000260
கோத்தகிரி – 9445000261
குந்தா – 9445000263
கூடலூர் – 9445000262
பந்தலூர் – 9445000264 SHARE பண்ணுங்க!
News August 14, 2025
நீலகிரி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

நீலகிரியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News August 14, 2025
நீலகிரி: இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

நீலகிரி, உதகை அருகே குருத்துக்குளி கிராமத்தில் நீலகிரி மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பில், இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. செஞ்சிலுவை சங்க மருத்துவர் ஜெய்னாஃ பத்திலா தங்கள் குழுவினருடன் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை வழங்கினார். செஞ்சிலுவை சங்க தலைவர் கே. கோபால், செயலாளர் மோரிஸ் சாந்தா குருஸ், முன்னாள் தலைவர் கே.ஆர்.மணி உள்பட பலர் பங்கேற்றனர்.