News August 17, 2024

சேலத்தில் மகளிர் உரிமைத் தொகை குறித்து வதந்தி

image

சமூக ஊடகங்களில் ‘மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், மனுக்களை வழங்கினால் அனைவருக்கும் உடனே உரிமைத்தொகை கிடைக்கும்’ என தவறான தகவல் பகிரப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சேலம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!

Similar News

News July 6, 2025

இலவசமாக நாட்டுப்புறக்கலையை கற்றுக்கொள்ளுங்கள்!

image

சேலம்: தளவாய்பட்டியில் உள்ள மண்டல கலை பண்பாட்டு மையத்தில் மாணவர் சேர்க்கை, வரும், 10ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. தப்பாட்டம், சிலம் பாட்டம், உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் இலவசமாக கற்றுத்தரப்படும் என கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதில் கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் சேரலாம். விண்ணப்பங்கள், விபரங்களுக்கு, 0427 2906197, 99526 65007களில் தொடர்பு கொள்ளலாம்.

News July 6, 2025

சேலத்தில் ஜூலை 15 துவக்கம் ஆட்சித் தலைவர் தகவல்

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி துவங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். 432 முகாம்கள் நடத்தப்படுவதாகவும முகமின் வாயிலாக அனைத்து தரப்பினரின் மனுக்களையும் பெற்று நிவர்த்தி செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

News July 6, 2025

கோயில் பிரசாதம் சாப்பிட்ட 20 பேர் அட்மிட்

image

சேலம்: கிச்சிப்பாளையம், எஸ்.எம்.சி., காலனி அருகே சந்து மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு அங்கு நேற்று இரவு, 7:30 மணிக்கு பூஜை முடிந்த பின், தக்காளி சாதம், சுண்டல் பிரசா தமாக வழங்கப்பட்டன. அதை சாப்பிட்ட, 20க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுபோக்கு, வாந்தி, மயக்கம் ஏற்படவே உடனே அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப் பட்டனர். கிச்சிப் பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!