News August 17, 2024

என்ன காரணத்தைக் கூறப் போகிறீர்கள்? சிராஜ்

image

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் வன்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் அறச்சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆணாதிக்க முறைக்கு எதிராக தனது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் அவரது இன்ஸ்டா பதிவில், “இந்த நேரத்தில் நீங்கள் என்ன காரணத்தைக் கூறப் போகிறீர்கள்? அவள் மேல் தான் தவறுள்ளது என்பீர்களா? Men Will Be Men அப்படித் தானே?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News December 20, 2025

‘2028’ டிரம்ப் போடும் புது பிளான்

image

வரி விவகாரங்களை விட்டுவிட்டு விண்வெளி ஆய்வில் அமெரிக்காவின் இலக்கை துரிதப்படுத்தும் புதிய நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். குறிப்பாக 2028-க்குள் நிலவில் ஒரு நிரந்தர கண்காணிப்பு மையம், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது உள்ளிட்டவை இதில் முக்கிய அங்கமாகும். இதில், இந்திய விண்வெளி ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் USA-வுடன் இணைந்து செயல்பட வாய்ப்புகள் உருவாகும் என நம்பப்படுகிறது.

News December 20, 2025

மார்கழி ஸ்பெஷல் கலர் கோலங்கள்!

image

மார்கழி மாதத்தின் அதிகாலையில் ஓசோன் படலம் வழியாக உடல்நலனை மேம்படுத்தும் காற்று பூமியில் அதிகம் இறங்கும் என்று நம்பப்படுகிறது. இது நம் வியாதிகளைக் கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கையில் தான், அதிகாலையில் பெண்கள் எழுந்து சாணம் தெளித்து கோலமிட முன்னோர்கள் அறிவுறுத்தினர். அப்படியாக, வீட்டுவாசலை அலங்கரிக்கும் ஸ்பெஷல் கலர் கோலங்கள் போட்டோக்களாக கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.

News December 20, 2025

உயிரோடு உள்ளவர்களை நீக்கவில்லை: நயினார்

image

2002-ல் உயிரிழந்தும், வாக்காளர் பட்டியலில் உயிரோடு இருப்பதாக இருந்த நபர்களை தான் மத்திய அரசு நீக்கியுள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இப்படி இறந்தவர்கள், இடமாறி போனவர்களை மட்டுமே நீக்கியுள்ளதாக கூறிய அவர், உயிரோடு உள்ளவர்கள் நீக்கப்படவிலை என்று குறிப்பிட்டார். கள்ள ஓட்டுகளை திமுக சேர்க்கவில்லை என்றால், பின்னர் ஏன் பயப்பட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!