News August 17, 2024
நீலகிரி: ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கூட்டாடா அருகே கோவில் மட்டம் பகுதியில் அரசு பேருந்தில் உயர் அழுத்த மின் கம்பி உரசிய விபத்தில், பேருந்து ஓட்டுனர் பிரதாப் (42) உயிரிழந்தார். இந்நிலையில், பிரதாப் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்க உத்திரவிட்டுள்ளார்.
Similar News
News November 6, 2025
நீலகிரியில் அரசு பேருந்து விபத்து!

நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து கேரள மாநிலம் சுல்தான் பத்தேரிக்கு நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. நாடுகாணி பாண்டியாறு குடோன் அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதற்காக டிரைவர் பேருந்தை திருப்ப முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர மரத்தில் மோதியது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. ஆனால், அதிர்ஷவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
News November 6, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

நீலகிரி ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். 10 வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு 200 ரூபாயும், தேர்ச்சி பெற்றோருக்கு 300 ரூபாயும், பட்டய படிப்பு படித்தவர்களுக்கு 400 ரூபாயும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 600 ரூபாயும் வழங்கப்படுகிறது. எனவே ஊட்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
News November 5, 2025
நீலகிரி இரவு ரோந்து காவலர் விபரம்!

நீலகிரி மாவட்டத்தில் இன்று (05.11.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள், உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள், நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.


