News August 17, 2024

சிவன் கோவில்களில் இன்று சிறப்பு பூஜை

image

சிவன் கோவில்களில் பிரதோஷ நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நாளில் நந்தி பகவானுக்கும் சிவனுக்கும் பல்வேறு வகை பொருட்களினால் அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இன்று சனி பிரதோஷம் என்பதாால் அனைத்து சிவன் கோவில்களிலும், சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் சங்கமும் அறநிலையத்துறையும் செய்து வருகிறது.

Similar News

News September 19, 2025

குமரி: முகாமை தொடங்கி வைத்த எம்.பி

image

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (செப். 19) நடைபெற்றது.
முகாமை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துக்கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

News September 19, 2025

குமரியில் 17 பெற்றோர்கள் மீது வழக்கு

image

குமரி: போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீதும், விபத்துகளை தடுக்கும் வகையிலும் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் 6 சிறார்கள் ஓட்டி வந்த பைக்குகளை பறிமுதல் செய்தனர். கடந்த 5 நாட்களில் மட்டும் 17 சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, மொத்தம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.

News September 19, 2025

குமரி: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <>இங்கு க்ளிக் செய்யுங்க<<>>…மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950. எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!